How to Use Alight Motion App in Tamil-தமிழ்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் Alight Motion செயலியை பயன்படுத்தி எவ்வாறு எளிமையான முறையில் வீடியோவை எடிட் செய்வது மற்றும் Alight Motion செயலியை எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்றும் பார்ப்போம்.

இந்த Alight Motion வீடியோ எடிட்டிங் செயலியை இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த வீடியோ எடிட்டிங் செயலி ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நம்முடைய வீடியோவை நமக்கு தேவையானதை போன்று வெவ்வேறு முறையில் எடிட் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையான முறையாகும்.

முதலில் இந்த Alight Motion செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான குறிப்பு இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து அனைவரும் முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இந்த Alight Motion எடிட்டிங் செயலியை பயன்படுத்தி நமது  வீடியோவை பல்வேறு வகைகளில் எடிட் செய்ய முடியும். அதாவது நமது போட்டோவை பயன்படுத்தி நமக்கு தேவையானதை போன்று எடிட் செய்ய முடியும் அது மட்டுமின்றி நம்முடைய வீடியோவை நமக்கு தேவையானதை போன்றும் இதில் எடிட் செய்ய முடியும். அதுமட்டுமின்றி வண்ணங்களை மாற்றி அமைப்பது மற்றும் நமக்கு தேவையான எழுத்துக்களை சேர்ப்பது இதுபோன்று அனைத்து வகையான எடிட்டிங்கை இந்த ஒரு செயலியை பயன்படுத்தி ஒரு சிறப்பாக மாற்ற முடியும்

முக்கியமாக இந்த செயலியை பயன்படுத்தி நமது சாதாரண வீடியோவை ஒரு Advance Level வீடியோவாக எளிமையாக எடிட் செய்ய முடியும் அதுமட்டுமின்றி நமது வீடியோவில் நமக்கு தேவையான கலர் பில்டர்கள் மற்றும் Shake Effect போன்றவற்றை எளிமையான முறையில் சேர்த்து நமது வீடியோவை சிறப்பாக எடிட் செய்ய முடியும். அதுமட்டுமின்றி இந்த Alight Motion செயலியை பயன்படுத்தி அதிகமான மக்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் reels போன்றவற்றை எடிட் செய்ய இந்த செயலியை பயன் படுத்துகின்றனர். மற்றும் இந்த செயலியில் வீடியோவை எடிட் செய்வதற்கான அதிகபட்ச எடிட்டிங் ஆப்ஷன்கள் இதில் அடங்கியுள்ளது.

Alight Motion செயலியை பயன்படுத்தும் முறை:


இப்பொழுது இந்த Alight Motion செயலியை பயன்படுத்தி நமது ஒரு சாதாரண வீடியோவை எவ்வாறு ஒரு சிறப்பான வீடியோவாக எடிட் செய்வது என்று பார்ப்போம்.

முதலில் செயலியை பதிவிறக்கம் செய்த பின் அதனைத் திறக்கவும் திறந்தவுடன் கீழ்ப்பகுதியில் நடுவில் + இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதைத் தொடவும்.தொட்டவுடன் புதிய Project உருவாக்குவதற்கான பக்கம் தோன்றும் அதில் frame size தேவையான அளவில் தேர்வு செய்தபின் கீழ்ப்பகுதியில் உள்ள Creat Project என்ற ஆப்ஷனை தொடவும். தொட்டவுடன் உங்களுக்கு புதிய Project உருவாகிவிடும் முதலில் வலது புறத்தில் கீழ் பகுதியில் + இது போன்ற ஒரு குறியீடு இருக்கும் அதைத் தொடவும். தொட்டவுடன் அதில் மேல் பகுதியில் இரண்டாவதாக உள்ள Media என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் அது உங்களை கேலரிக்கு அழைத்துச் செல்லும் அதில் உங்களுடைய போட்டோ அல்லது வீடியோ கிளிக் செய்த பின் அது சேர்ந்துவிடும். சேர்ந்தவுடன் கீழ்ப்பகுதியில் வீடியோவை எடிட் செய்வதற்கு தேவையான வெவ்வேறு வகையான tool ஆப்ஷன்கள் இருக்கும் 

இப்பொழுது அந்த டூல்களை ஒவ்வொன்றாக நீங்கள் உங்கள் வீடியோவிற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று சோதித்துப் பார்க்கலாம் இவ்வாறு சோதித்துப் பார்ப்பதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு toolன் பயன்பாடுகளை எளிதாக தெரிந்து கொள்ளலாம் இதனை தொடர்ந்து நீங்கள் செய்யும்போது இந்த செயலியின் பயன்படுத்தி உங்களுடைய வீடியோவை எடிட் செய்வது மிகவும் சுலபமான முறை ஆகிவிடும்.

நீங்கள் உங்கள் வீடியோவை எடிட் செய்த பிறகு அதனை save செய்வதற்கு வலது புறத்தில் மேல் பகுதியில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் தோன்றும் இடத்தில் முதலாவதாக வீடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதற்கு வலதுபுறத்தில் > இது போன்று ஒரு சிறிய குறியீடு இருக்கும் அதை தொடவும். தொட்டவுடன் முதலில் வீடியோவின் குவாலிட்டியை தேர்வு செய்தபின் கீழ்ப்புறத்தில் உள்ள Export என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் நீங்கள் எடிட் செய்த வீடியோ உங்களுடைய கேலரியில் சேர்ந்திருக்கும்.

பதிவிரக்கம் செய்யும் முறை:

முதலில் கீழே உள்ள Download என்பதை தொடவும் தொட்டவுடன் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அங்கு Download Here என்பதை கிளிக் செய்தவுடன் 30 நிமிடம் காத்திருக்கும் பின் அந்த இடத்தில் Download என்று தோன்றும் அதை தொடவும்.தொட்டவுடன் அது உங்களை Google Driveகு அழைத்து செல்லும் அங்கு உங்களுக்கு தேவையான Appஐ பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.

                              Download

2 thoughts on “How to Use Alight Motion App in Tamil-தமிழ்”

Leave a Comment